பொங்கல் பண்டிகை எதிரொலி- தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள்
செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கசாவடியில் அதிகமான இருசக்கர வாகனங்களில் சென்னையில் தென் மாவட்டத்தை நோக்கி செல்கின்றனர்.

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை ஜனவரி 14 ஆம் தேதி நாளை போகி பண்டிகை அரசு விடுமுறை அறிவித்துள்ளது 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை, 16 ஆம் தேதி மாட்டுப்பொங்கல், 17 ஆம் தேதி காணும் பொங்கல், 18 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என தொடர் ஐந்து நாட்கள் விடுமுறை எதிரொலியால் சென்னையில் உள்ள மக்கள் தங்களின் சொந்த ஊரில் பொங்கல் விழாவை கொண்டாட தென் மாவட்டத்தை நோக்கி படையெடுத்துள்ளனர். செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கசாவடியில் அதிகமான இருசக்கர வாகனங்களில் சென்னையில் தென் மாவட்டத்தை நோக்கி செல்கின்றனர். இருசக்கர வாகனத்திலேயே மூட்டை முடிச்சுகளுடன் குடும்பத்து செல்கின்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கசாவடியில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட காவல் துறை சாரபில் ஒரு ஏ.டி.எஸ்.பி, இரண்டு டி.எஸ்.பி, நான்கு காவல் ஆய்வாளர்கள் என 25 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தற்காலிக பேருந்து நிலையம் அமைத்து இருசக்கர வாகனங்கள் மூன்று சக்கர வாகனங்கள் செல்ல தனி பாதை உருவாக்கப்பட்டு தென் மாவட்டத்தை நோக்கி அனுப்பி வைத்து வருகின்றனர். இதனால் தற்போது செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கசாவடியில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகங்களை அனுப்பி வைக்கின்றனர். வழக்கமாக செங்கல்பட்டு பரனூர் சுங்கசாவடியில் சென்னையில் இருந்து தென் மாவட்டத்தை நோக்கி செல்லும் வழியில் ஆறு பூத்களும் அதே போல் தென் மாவட்டத்தில் இருந்து சென்னை மார்க்கமாக செல்லும் வழியில் ஆறு பூத் அமைக்கப்பட்டு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் கூடுதலாக ஒரு பூத் என மொத்தம் சென்னை - திருச்சி மார்கமாக ஏழு பூத்களில் வாகனங்களை அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளனர். கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் சுங்க கட்டணம் வசூலிக்காமல் வாகனங்களை அனுப்பி வைத்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.


