நாளை முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு

 
pondicherry panley milk

புதுச்சேரியில் நாளை முதல் பாண்லே பால் விலை லிட்டருக்கு ரூ. 4 உயர்கிறது. 

Top Ponlait Milk Distributors in Auroville - Best Ponlait Milk Distributors  Pondicherry - Justdial

புதுச்சேரி அரசு நிறுவனமான பாண்லே, உற்பத்தியாளர்களிடமிருந்து பாலை கொள்முதல் செய்து நுகர்வோருக்கு விற்பனை செய்கிறது. கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என உற்பத்தியாளர்கள் அரசை வலியுறுத்தி வந்தனர். அதேநேரத்தில் பால் பற்றாக்குறையால் வெளிமாநிலங்களில் இருந்து பாலை பாண்லே நிறுவனம் கொள்முதல் செய்கிறது. இச்சூழலில் பாலின் கொள்முதல் விலையை ரூ. 34ல் இருந்து ரூ. 37 ஆக உயர்த்தி முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். பால்விலையை உயர்த்தாமல் இருந்தார்.இந்த சூழலில் பாண்லே பால் விற்பனை விலை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்படுகிறது. 

இதுதொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யஷ்வந்தைய்யா வெளியிட்ட உத்தரவில், நீல நிற பாக்கெட் (டோன்ட் மில்க்) ரூ. 42ல் இருந்து ரூ. 46க்கும், பச்சை நிற பாக்கெட்(ஸ்பெஷல் டோன்ட் மில்க்) ரூ.44ல் இருந்து ரூ. 48க்கும், ஆரஞ்சு நிற பாக்கெட் (ஸ்டேன்டர்ட் மில்க்)  ரூ. 48ல் இருந்து ரூ. 52க்கும் உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாக இரு பாக்கெட் பால் அறிமுகமாகிறது. டபுள் டோன்ட் மில்க் என மஞ்சள் நிற பால்பாக்கெட் ரூ. 42க்கும், புல் கீரிம் பால் என சிவப்பு நிற பாக்கெட் பால் ரூ. 62க்கும் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.