அதிமுக- பாஜக கூட்டணி தொடருமா? பொன்.ராதா பதில்

 
pon radha

கும்பகோணத்தில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் . இதில் பா.ஜ.க வின் தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

pon

இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், “பாரதிய ஜனதா கட்சி அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளது. இது தொடருமா? என்பது குறித்து கட்சியின் தலைமையும் ,மாநில தலைமையும் இதுகுறித்து முடிவு செய்யும். அதிமுக- பாஜக இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது. கருத்து வேறுபாடுகள் இல்லாத கட்சி எங்கு உள்ளது. கருத்து வேறுபாடு இல்லாத குடும்பம் எங்கு உள்ளது?  அதிமுக தொடர்பான பிரச்சனையை அதிமுகவினர் பார்த்துக் கொள்வார்கள்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொது தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 இடங்களையும், புதுச்சேரியில் ஒரு இடங்களையும் பாஜக வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களது இலக்கு. அதற்காகவே நாங்கள் திட்டமிட்டு பணியாற்றுகிறோம். கருத்து வேறுபாடுகள் காரணமாக சமீப நாட்களாக பலர் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிகளில் சேருகிறார்கள். இது தவிர்க்க முடியாதது” என்றார்.