இப்படியே போனால் தமிழ்நாடு போக்சோ மாநிலமாகிவிடும்- பொன்.ராதாகிருஷ்ணன்

 
pon radha

முன்னாள் பாஜக மாநிலபொது செயலாளர் SR.சரவணப்பெருமாள் 8ம் ஆண்டு நினைவு தின அனுசரிப்பு தூத்துக்குடி ஏட்டயபுரம் ரோட்டில் உள்ள தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். 

பின்னர், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகள், பெற்றோர்கள் குழந்தைகளை கொள்வது என ஏராளமானவானவை நடைபெற்று வருகிறது. குறிப்பாக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகமாக உள்ளது. இதனை பொருட்டாக அரசு எடுக்கவில்லை யாரும் கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை. இவ்வாறு போனால் இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழ்நாடு போக்சோ மாநிலமாக மாறிவிடும். உலக நாடுகள் இவ்வாறு பேச ஆரம்பித்து விடுவார்கள். தமிழ்நாட்டுக்கு வர பயப்படுவார்கள். இந்த நிலையிலிருந்து தமிழ்நாட்டை காக்க வேண்டிய பொறுப்பு திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொறுப்பு இதனை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இல்லை போக்சோ நாடு தான் தேவை என்றால் போக்சோ நாட்டினுடைய முதலமைச்சராகவும், அமைச்சராகவும், இந்த காவல்துறையால் பெருமைப்படுகிறத என்று சொன்னால் 2026 நெருங்குவதற்கு உள்ளாக இந்த ஆட்சி இல்லாமல் போய்விடும்.

இலங்கையில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு? நரேந்திர மோடி ஆளுமைக்கு கீழ் வந்த பின்பு தான் கொலைகள் நடப்பது இல்லாமல் போனது. மீனவர்கள் பிரச்சனையை பொறுத்தவரையில் தீர்வு கிடைக்க கொஞ்ச காலம் ஆகலாம் என கூறிய பொன் ராதாகிருஷ்ணன் தமிழக அரசு மீனவர்கள் பிரச்னையை கனிவுடன் அணுக வேண்டும். கடுமையான நடவடிக்கை எடுத்தால் என்று சொன்னால் இலங்கைக்கும் பாதிப்பு இல்லை, நமக்கும் பாதிப்பு இல்லை என்றார்.