ரூ. 6.13 லட்சத்துக்கு டிபன் சாப்பிட்ட அந்த விஐபி யாரு?- பொன்.மாணிக்கவேல் பரபரப்பு

 
பொன் மாணிக்கவேலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் திருத்தணி முருகன் கோயில் பணத்தை சிற்றுண்டிக்காக ரூ. 6.13 லட்சம் முறைகேடாக  பயன்ப்படுத்திய அறநிலைத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஆலையம் காப்போம் அமைப்பின் சார்பில்  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு  முன்னாள் ஐஜி  பொன் மானிக்கவேல்  திருத்தணி காவல் நிலையத்தில்  புகார் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்பப்டுத்தியுள்ளது.

1,071 ஆண்டுகள் பழைமையான கோயிலைக் காணவில்லை..!" - பொன்.மாணிக்கவேல் `பரபர'  புகார் | pon manickavel complains that the 1071-years-old Perumal temple  near Kanchipuram is missing - Vikatan

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி யாக பணியாற்றி ஓய்வு பெற்ற பொன் மானிக்கவேல் மற்றும் ஆலையம் காப்போம் அமைப்பின் நிர்வாகிகளுடன்  திருத்தணி காவல் நிலையத்திற்கு வந்தார். காவல் நிலையத்தில் ஆய்வாளர்  மதியரசன் புகார் மனு வழங்கிய பின்னர் காவல் நிலைய வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் தேதி   அறநிலைத்துறை மானிய கோரிக்கையின் போது  முக்கிய பிரமுகர்கள், உயர் அரசு அதிகாரிகளுக்கு காலை சிற்றுண்டிக்காக  திருத்தணி முருகன் கோயில் பணத்திலிருந்து  ரூ.6 லட்சத்து 13 ஆயிரத்து 657 ரூபாய்  முறைகேடாக  செலவு செய்ததாக,  இக் கோயில் செயல் அலுவலர் ஆவனத்தை ஏற்ப்படுத்தி இருக்கிறார்.  


இருப்பினும், முறைகேடு மீது நடவடிக்கை எடுக்கமல், உடந்தையாக செயல்பட்ட அன்றைய அறநிலைத்துறை ஆணையர் உட்பட  அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.   தான் ஐஜி யாக இருந்த போது  அமெரிக்காவுக்கு மட்டும் 2622 ஐம்பொன் சிலைகள் கடத்தியது கண்டுபிடித்ததாகவும்,   இருப்பினும் அச் சிலைகள் மீட்க  கடந்த அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்காத நிலையில்,  தற்போது  மூன்று ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளவர்களும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.