'மெட்ரோ திட்டத்தில் அரசியல்"- மத்திய அமைச்சர் கண்டனம்

 
ச் ச்

இதுவரை யாருக்கும் வழங்காத வகையில் சென்னை மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியது என மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் கூறியுள்ளார்.

கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு ‘நிராகரித்துவிட்டது’ என்ற தகவல் நேற்று முதல் பரவியிருந்தது.  தமிழக அரசின் கடிதத்தில் சராசரி பயண வேகம், தினசரி பயணிகள் கணிப்பு, சாலை அகலம் மற்றும் பொருளாதார மதிப்பீடு உள்ளிட்ட முக்கிய தரவுகள் துல்லியமற்றவையாக இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இரு நகரங்களும் மெட்ரோ ரெயில் கொள்கை தகுதிக்குத் தேவையான 20 லட்சம் மக்கள் தொகையை எட்டவில்லை என்றும் அமைச்சகம் சுட்டிக்காட்டியிருந்தது. இந்நிலையில் கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்களை மத்திய அரசு நிராகரித்து விட்டது என்றும், இது மத்திய அரசின் கீழ்மையான பழிவாங்கும் போக்கு என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிக்கை விட்டிருந்தார்.

கோவை, மதுரை மெட்ரோ திட்டம் தொடர்பாக முதல்வர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், மத்திய வீட்டுவசதி, நகர்ப்புறத் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் தனது எக்ஸ் தளத்தில், “மெட்ரோ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அரசியலாக்குவது துரதிருஷ்டவசமானது. சென்னை மெட்ரோ 2ஆம் கட்டத்துக்கு ரூ. 63,246 கோடியில் ஒப்புதல் அளித்த பெருந்தன்மையை மறந்துவிட்டார். இதுவரை யாருக்கும் வழங்காத வகையில் சென்னை மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியது” எனக் குறிப்பிட்டுள்ளார்.