மத்திய அமைச்சர் எல்.முருகன் பிறந்தநாள் - தலைவர்கள் வாழ்த்து

 
L.Murugan

மத்திய அமைச்சர் எல்.முருகன் பிறந்தநாளையொட்டி  அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய இணையமைச்சரும்,  @BJP4TamilNadu முன்னாள் மாநிலத் தலைவருமான அண்ணன் திரு  @Murugan_MoS
 அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாநிலத் தலைவராக, கட்சி வளர்ச்சிக்குப் பெரும்பணிகளை மேற்கொண்டதோடு, மத்திய இணையமைச்சர் பொறுப்பில் சிறப்பாகப் பணியாற்றி வருவதோடு, பொதுமக்கள் பேரன்பையும் பெற்றிருக்கும் அண்ணன் திரு  @Murugan_MoS அவர்கள், தனது நல்ல உடல் நலனுடன், நீண்ட ஆயுளுடன் தமது பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

டிடிவி தினகரன் அமமுக பொதுச்செயலாளர் 


மத்திய இணையமைச்சரும் தமிழக பாஜக மூத்த தலைவருமான சகோதரர் திரு.எல்.முருகன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

திரு.எல்.முருகன் அவர்கள் பூரண உடல் நலத்துடன் நீண்டகாலம்  மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

வானதி சீனிவாசன் பாஜக எம்எல்ஏ 


மத்திய இணையமைச்சரும்,  @BJP4TamilNaduமுன்னாள் மாநிலத் தலைவருமான திரு  @Murugan_MoS அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் மக்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.