பெற்றோர்கள் கவனத்திற்கு! நவ. 22இல் போலியோ சொட்டு மருந்து முகாம்!
Nov 19, 2026, 22:10 IST1795106420703
நவம்பர் 22 ஆம் தேதி 6 மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு நவம்பர், 22 (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. செங்கல்பட்டு, மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சாவூர், திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 6,647 மையங்களில் முகாம் நடைபெறும்.
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் சொட்டு மருந்து வழங்கப்படும். முகாம் நேரம்: காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை. 5 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளும் சொட்டு மருந்து பெறலாம் என தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

