3 நாட்களாக சீமானுக்காக முகாமிட்டிருந்த போலீசார்- திடீர் எஸ்கேப்

 
போலீஸ்

சீமானுக்கு சம்மன் வழங்க சென்னையில் முகாமிட்டிருந்த போலீசார் ஈரோடு திரும்பினர்.

சீமான் வீட்டிற்கு கூடுதல் போலீசார் வரவழைப்பு - காவல் துணை ஆணையர் தலைமையில்  போலீஸ் குவிப்பு


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையின் போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வன்முறையை தூண்டும்  வகையில் பேசிய வழக்கில் முதல் சம்மனுக்கு சீமான் ஆஜர் ஆகாததால், இரண்டாவது சம்மன் வழங்க ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் ஆய்வாளர் விஜயன் தலைமையில் கடந்த மூன்று நாட்களாக நீலாங்கரையில் முகாமிட்டிருந்தனர். 


இந்த நிலையில் சீமான் சுற்றுப் பயணத்தில் இருப்பதால், உயரதிகாரிகள் உத்தரவுப்படி போலீசார் ஈரோடு  திரும்பினர். அடுத்த வாரம் சம்மன் வழங்க மீண்டும் வருவோம் என கருங்கல்பாளையம் போலீசார் தெரிவித்தனர்.