ஆந்திரா - செம்மரக்கடத்தலை தடுக்க முயன்ற காவலர் கார் ஏற்றி கொலை!

 
tn

ஆந்திராவில் செம்மரக்கடத்தலை தடுக்க முயன்ற காவலர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

tn

ஆந்திர வனப்பகுதியில் செம்மர கடத்தல் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.  இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டும்,  மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டும்  வருகிறது.

tn

இந்நிலையில் ஆந்திராவில் செம்மரக்கடத்தலை தடுக்க சென்ற காவலர் பி.கணேஷ் (30) மீது கார் ஏற்றிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரோந்து பணியின்போது, வேகமாக வந்த காரை தடுத்து நிறுத்த முயற்சி செய்துள்ளார் கணேஷ். அப்போது அவரை காரில் ஏற்றி கொலை செய்துவிட்டு தப்பித்தது தெரியவந்தது. 3 பேர் தப்பியோடிய நிலையில் இருவர் கைது செய்யப்பட்டதுடன்,  7 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.