கிரிப்டோ கரன்சியில் ரூ.50 கோடி மோசடி- தமன்னா, காஜல் அகர்வாலிடம் விசாரிக்க போலீஸ் திட்டம்

 
police will investication on Actresses Tamanna Bhatia & Kajal Aggarwal

கிரிப்டோ கரன்ஸியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் எனக் கூறி பலரிடம் சுமார் ரூ.50 கோடி வரை நூதனமோசடியில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த 2 பேரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். 

kajal-agarwal-tamanna-photos-at-khazana-jewellery-launch-7 – My Gallery

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யுங்கள் பல மடங்கு லாபத்தை தருகிறோம் என்று சொல்லி புதுச்சேரியைச் சேர்ந்த 10 நபர்களிடம் 2 கோடியே 60 லட்ச ரூபாய் பணத்தை முதலீடு செய்ய வைத்து அந்த பணத்தை அவர்களால் எடுக்க முடியாமலும் அவர்களுக்கு போட்ட பணம் கூட கிடைக்க முடியாமல் கிரிப்டோ கரன்சியாக கூட வாங்க முடியாமல் பணத்தை நட்டப்படுத்தி விட்டார்கள் என்று கொடுத்த புகாரின் பேரில் புதுச்சேரி சைபர் கி‌ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் மோசடி கும்பல் கோயமுத்தூரை தலைமையிடமாக கொண்டு 2024 ஆம் ஆண்டு சினிமா நடிகைகளான தமன்னா, காஜல் அகர்வால் கொண்டு மிக பிரம்மாண்டமாக துவக்க விழாவை நடத்தி மூன்று மாதங்களுக்கு பிறகு 100 நபர்களுக்கு ஒரு கோடி ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் இருக்கின்ற கார்களை அவர்கள் முதலீடு செய்ததற்கு ஏற்ப பரிசுகளை வழங்கி மேலும் மும்பையில் கப்பலில் மிகப்பெரிய விழாவை வைத்து பொதுமக்களிடமிருந்து நிதியை திரட்டியது தெரியவந்தது


மேற்படி கிரிப்டோ கரன்சி எந்த விதமான கிரிப்டோ கரன்சி டிரேடிங் ஆப்களிலும் வரவில்லை என்பதும் பணத்தை நேரடியாக இவர்கள் ஹைபை சர்க்கிள் என்ற ஒரு வங்கி கணக்கிற்கு புதுச்சேரியை சேர்ந்த அனைவருக்கும் தெரிய வந்தது. மேலும் டிசி எக்ஸ் என்ற ஒரு காயினை உங்களுக்கு அனுப்புகிறோம் என்று சொல்லி இவர்களாக உருவாக்கிய ஒரு கிரிப்டோ கரன்சியை புதுச்சேரி நபர்களுக்கு அனுப்பி அந்த டிசிஎஸ் காயினை விற்க முடியாமலும், பழையபடி பணமாக மாற்ற முடியாமலும் குழம்பி இருந்தனர்.  இதில் புதுச்சேரி சேர்ந்தவர்களுக்கு மட்டும் 3.6 கோடி அளவிற்கு நஷ்டம் ஏற்படுத்தி சம்பந்தமாக புகார் விசாரணையில் உள்ளது. மேற்படி மோசடி கும்பல் மீது டெல்லி, ஒரிசா, மகாராஷ்டிரா, மும்பை கோயமுத்தூர், பெங்களூர்,  பாண்டிச்சேரி,ஆந்திரபிரதேஷ், கேரளா,விழுப்புரம், திருப்பூர் போன்ற இடங்களில் வழக்குப்பதிவு செய்ததும் இணைய வழி மோசடிக்காரர்களுக்கு அக்கவுண்டை வாங்கி கொடுத்து பல கோடி ரூபாய் பணத்தை இணையவழி மோசடிக்காரர்கள் திருட இவர்கள் உடந்தையாக இருந்ததும் இரண்டு வழக்குகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

Tamanna Bhatia and Kajal Agarwal : r/BeautifulIndianWomen

மேற்கண்ட கோயம்புத்தூர் மோசடி கும்பல் ஈடுபட்டிருப்பதும் அவர்கள் மீது புதுச்சேரியில் ஏற்கனவே ஒரு வழக்கு இருப்பதும் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதே வழக்கு சம்பந்தமாக மேற்படி குற்றவாளிகள் இம்ரான் பாஷா ராய்ப்பூர் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டு இருப்பதும் விசாரணையில் தெரிய வருகிறது. முதுநிலை காவல் கண்காணிப்பாளரின் அறிவுறுத்தல் படி பல்வேறு இணைய வழி யுக்திகளையும் புதுச்சேரி காவல் நிலையத்தில் இருக்கின்ற புதிய வகை நுண் பொருட்களை வைத்து மேற்படி நபர்களை அடையாளம் காணப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கோயமுத்தூரில் வைத்து நித்தீஷ்ஜெயின் மற்றும் அரவிந்த் என்ற இரண்டு நபர்களை கைது செய்து தலைமறைவாக உள்ள நபர்களை தேடி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் கோயம்புத்தூர், பெங்களூர், சென்னை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட நபர்களிடம் பாபு என்கிற சையது உஸ்மான், இம்ரான்பாஷா, தாமோதரன், நூறுமுகமது, சந்தானம், நந்தியப்பன் கணேசன், ஆலியா ரேஷ்மாபர்வீன் அன்சார் மற்றும் லுக்மான் என்பவர்களுக்கும் தொடர்பு இருப்பதும் பொதுமக்களிடம் இருந்து திரட்டிய 50 கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை மோசடி செய்ததில் இதில் மூளையாக இருந்து செயல்பட்டது என்பவர்கள் குறிப்பிடத்தக்கது. தனி படை போலீசார் அவர்களை பிடிக்க கோயம்புத்தூர் பகுதியில் முகாம்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.  

மேலும் இதில் தொடர்புடைய நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களை கைது செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்படும். கிரிப்டோகரன்சில் அதிக லாபம் கொடுக்கிறோம் என்று நிறைய விளம்பரங்கள் தற்போது வந்து கொண்டிருக்கிறது மேலும் எம்எல்எம் முறையிலும் உங்களுக்கு முதலீடு செய்தால் மிக அதிக லாபமும் மற்றும் பல மடங்கு லாபமும் கிடைக்க செய்யும் என்ற விளம்பரம் சமூக வலைதளங்களில் பொதுவாகவே நிறைய வந்து கொண்டிருக்கிறது. இதுபோன்று ஆன்லைன் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து சென்ற ஆண்டு மட்டும் 25 கோடி ரூபாய்க்கு மேல் பொதுமக்கள் பணத்தை இழந்துள்ளனர். உடனடி லோன் கொடுக்கிறோம் முதலீடு செய்தால் அதிகம் அடங்கலாபம் கிரிப்டோ கரன்சியில் அதிக லாபம் என்று வருகின்ற அனைத்து விளம்பரங்களுமே இணைய வழி மோசடிக்காரர்களால் ஜோடிக்கப்பட்டது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருந்து பணத்தை இழக்க வேண்டாம் என எச்சரித்த சைபர் கிரைம் போலீசார்,  துவக்க விழாவில் பங்கேற்று விளம்பரப்படுத்தியதால் தமன்னா, காஜல் அகர்வாலிடம் விசாரணை நடத்த திட்டுமிட்டுள்ளதாகவும், பங்குதாரர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.