ராமதாஸ் வீட்டிற்கு போலீசார் வருகை!
பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்டதாக அளித்த புகாரில், விசாரணை நடத்த போலீசார் தைலாபுரம் வருகை புரிந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் இல்லத்தில் ஒட்டுக்கேட்பு கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. நாற்காலியில் அதிநவீன ஒட்டு கேட்பு கருவி கண்டுபிடிப்பு எதிரொலியால் சோபாவை மாற்றினார் பாமக நிறுவனர் ராமதாஸ். அந்த கருவி லண்டனிலிருந்து வாங்கப்பட்டதாக ராமதாஸ் கூறியிருந்தார். இதுதொடர்பாக புதுச்சேரி கீரனூர் காவல் நிலையம் மற்றும் விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் பாமகவினர் புகார் அளித்தனர்.
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்டதாக அளித்த புகாரில், விசாரணை நடத்த சைபர் க்ரைம் போலீசார் தைலாபுரம் வருகை புரிந்துள்ளனர். ஏடிஎஸ்பி தினகரன் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.


