ஞானசேகரனை காவலில் எடுக்கும் போலீஸ்

 
கைதான ஞானசேகரன் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு

அண்ணா பல்கலை. சம்பவத்தில் கைதான ஞானசேகரனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அரசியல் தொடர்பு, குற்றப் பின்னணியுடன் வலம்வந்த ஞானசேகரன் - செல்போனில் ஆபாச  வீடியோக்கள் | Gnanasekaran arrested for anna university issue -  hindutamil.in

அண்ணா பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான காவல்துறையினரின் விசாரணையில் குறைபாடுகள் உள்ளதாகவும், சட்டப்படி பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது என்ற போதிலும் வழக்கின் முதல் தகவல் அறிக்கை காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது என்பதால் இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன.

Image

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காவல்துறை மனுத்தாக்கல் செய்துள்ளனர்.