செல்போனுடன் ஆஜராகுமாறு டிடிஎப் வாசனுக்கு காவல்துறை சம்மன்

 
ttf

செல்போன் பேசியபடி காரை இயக்கிய வழக்கில் டிடிஎப் வாசன் தனது செல்போனை 3 நாட்களுக்குள் ஒப்படைக்க மதுரை அண்ணாநகர் காவல்நிலைய போலீசார் அவருக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அவரை ஆஜராகுமாறு போலீசார் தெரிவிக்கின்றனர்.

Actor and YouTuber TTF Vasan faces a major accident, details inside | Tamil  Movie News - Times of India

செல்போன் பேசியபடி காரை ஓட்டிய வழக்கில் ஜாமின் யூடியூபர், பைக் ரேஸருமான டிடிஎப் வாசன் கடந்த 15 ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி பகுதிக்கு காரில் வந்த அவர், செல்போனில் பேசிக் கொண்டே காரை ஓட்டியுள்ளார். இதுதொடர்பான வீடியோவை Twin Throttlers என்ற ID ல் YOUTUBE சேனலில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து மதுரை அண்ணா நகர் போலிசாரால் கைது செய்யப்பட்ட பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் மீது கவனக்குறைவாக வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் டிடிஎப் வாசனுக்கு ஜாமின் வழங்கி மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் செல்போனில் பேசிய படி கார் ஓட்டி வழக்கில் நீதிமன்ற உத்தரவுபடி அண்ணாநகர் காவல்நிலையத்தில் கடந்த 3 நாட்களாக கையெழுத்திட்ட நிலையில் நாளை (ஜூன் 03) தன்னிடம் உள்ள ஆவணங்கள் மற்றும் செல்போனுடன் ஆஜராகுமாறு யூடியூபர் டிடிஎப் வாசனுக்கு காவல்துறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.