கோவை விமான நிலையத்தில் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

 
கோவை விமான நிலையம்

கோவை விமான நிலைய வளாகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை விமான நிலைய விரிவாக்கம் எப்போது..?


ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் சக்ரத்தார் (34). இவர் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். கோவை சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றி வந்த சக்ரத்தார் நேற்று காலை 9 மணி அளவில் கோவை விமான விமான நிலையத்தில் உள்ள கழிவறையில் அவரது ஏ.கே 47 துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தகவலறிந்து வந்த பீளமேடு போலீசார் சக்ரத்தார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இ எஸ் ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை காவலர் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில் பணி அழுத்தம் காரணமா? அல்லது குடும்ப பிரச்சனை காரணமா? என்ற கோணத்தில் பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.