விஜய் பிரச்சார கூட்டத்திற்கு சென்ற காலி ஆம்புலன்ஸ் - எச்சரித்து அனுப்பிய போலீசார்!
Sep 27, 2025, 17:56 IST1758975993174
தவெக தலைவர் விஜய் இன்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கே.எஸ்.திரையரங்கம் அருகே பரப்புரை மேற்கொள்ள இருந்தார். முன்னதாக அவரது வருகையை ஒட்டி, அங்கு மக்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், அப்பகுதியில் ஆம்புலன்ஸ் ஒன்று அங்கும் இங்குமாக சுற்றிக் கொண்டிருந்தது.
இதனை கண்ட போலீசார், ஆம்புலன்ஸ் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆம்புலன்ஸில், பெட்டி பெட்டியாக தண்ணீர் பாட்டில்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், ஆம்புலன்ஸ் ஓட்டுநரை கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.

