நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

 
surya

சென்னை தி.நகர் ஆற்காடு தெருவில் வசித்து வரும் நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Vanniyar Sangam issues notice to Suriya, makers of Jai Bhim, seeks Rs 5 cr  in damages | The News Minute

நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம், பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இருளர் பழங்குடியினரின் வாழ்வியலை, அவர்களின் அறப்போராட்டத்தை மெய்யாக படம் பிடித்ததால் வெற்றியடைந்தது. ஆனால் தங்கள் சமூகத்தை இழிவுப்படுத்தியதாக ஜெய்பீம் திரைப்படத்திற்கு எதிராகவும், நடிகர் சூர்யாவிற்கு எதிராகவும் பா.ம.க.வினர் எதிர்ப்புகளை பதிவு செய்துவருகின்றனர்.

ஜெய் பீம் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யாவுற்கு எதிராக  கருத்துக்கள் வெளியான நிலையில், அசம்பாவிதம் நடைபெறாத வண்ணம் இருக்க நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு 5 துப்பாக்கி ஏந்திய போலிசாரை சென்னை காவல்துறை பாதுகாப்பு போட்டுள்ளது. ஜெய்பீம் திரைப்பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யாவின் குடும்பத்தினருக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுவரும் நிலையில், சென்னை எழும்பூர் ஆயுதப்படை காவலர்கள் 5 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.