திமுக எம்.பி. கலாநிதி வீராச்சாமியின் மகன் மீது போலீசார் மோசடி வழக்குப்பதிவு

 
a

திமுக எம்.பி. கலாநிதி வீராச்சாமியின் மகனான சித்தார்த், திமுக கவுன்சிலர் ராணி, கலாநிதி வீராசாமியின் உதவியாளர் ஆசை தம்பி, நாராயணன் ஆகியோர் மீது அண்ணா போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா சாலையில், கட்டிடத்துடன் கூடிய 14 கிரவுண்ட் இடத்தின் பத்திரத்தை வங்கியில் அடமானம் வைத்து மோசடி செய்ததாக கரூரை சேர்ந்த அன்புக்கரசு என்பவர், 2024ல் போலீசில் புகார் கொடுத்தனர். இப்புகாரின் பேரில் திமுக எம்.பி. கலாநிதி வீராச்சாமியின் மகனான சித்தார்த், திமுக கவுன்சிலர் ராணி, கலாநிதி வீராசாமியின் உதவியாளர் ஆசை தம்பி, நாராயணன் ஆகியோர் மீது அண்ணா போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்புக்கரசு என்பவரின் பத்திரத்தை அடமானம் வைத்து பணம் தராமல் ஏமாற்றியதாகவும் புகார் எழுந்துள்ளது. நீண்ட விசாரணைக்கு பிறகு 4 பேர் மீதும் அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.