ரூ.90ஆயிரத்தை ஆட்டோவில் தவறவிட்ட பெண்- குப்பையில் இருந்து மீட்ட போலீசார்

 

ரூ.90ஆயிரத்தை ஆட்டோவில் தவறவிட்ட பெண்- குப்பையில் இருந்து மீட்ட போலீசார்

திருடு போகாமல் இருக்க ரூ.90 ஆயிரத்தை தலையணையில் வைத்து சென்ற பெண், ஆட்டோவில் அந்த தலையணையை தவற விட்டிருக்கிறார். டெல்லிக்கு ரயிலில் சென்றபோது ஞாபகம் வந்ததால் மகன் போலீசில் புகார் கொடுக்க, குப்பையில் இருந்து அந்த 90 ஆயிரம் ரூபாய் பணத்தை மீட்டு உரியவரிடம் கொடுத்திருக்கிறார்கள் போலீசார்.

ரூ.90ஆயிரத்தை ஆட்டோவில் தவறவிட்ட பெண்- குப்பையில் இருந்து மீட்ட போலீசார்

ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் பெரும்பாலும் தங்களது முக்கியமான உடைமைகளை தலைக்கு வைத்துக் கொண்டு தூங்குவது வழக்கம். ஆனால் ஒரு பெண் தலையணையை எடுத்துச் சென்றிருக்கிறார். அதில் 90 ஆயிரம் ரூபாய் பணத்தை வைத்து பாதுகாப்பாக எடுத்துச் சென்றிருக்கிறார். திருடு போகாமல் இருப்பதற்காக இப்படி தலையணைக்குள் வைத்து எடுத்துச் சென்றிருக்கிறார் அந்தப் பெண்மணி.

சென்னை அடுத்த மணலி புதுநகர் ஆண்டார்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா பீவி என்ற 60 வயதுடைய அந்த பெண்மணி நேற்று இரவு டெல்லி சென்றிருக்கிறார். இதற்காக அவர் மணலி புதுநகர் ஆண்டார்குப்பம் பகுதியில் இருந்து ஆட்டோவில் ஏறி திருவொற்றியூர் ரயில் நிலையம் வந்து இறங்கியிருக்கிறார். பின்னர் அங்கிருந்து செண்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த அவர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து டெல்லிக்கு ரயிலில் சென்றிருக்கிறார்.

ரூ.90ஆயிரத்தை ஆட்டோவில் தவறவிட்ட பெண்- குப்பையில் இருந்து மீட்ட போலீசார்

ரயில் புறப்பட்டுச் சென்ற போதுதான் தன்னிடம் தலையணை இல்லை என்று கண்டு அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். சத்தம் போட்டு அலறவும் அங்கிருந்தவர்கள் தலையணை தானே அதற்கு ஏன் இப்படி அலறி துடிக்கிறீர்கள் என்று கேட்கவும், அதில் 90 ஆயிரம் ரூபாய் பணத்தை வைத்து இருந்ததைச் அப்போதுதான் சொல்லியிருக்கிறார். ரயில் பெட்டியில் தேடிப் பார்த்தபோது மற்ற பயணிகளும் பதறியடித்துக்கொண்டு தேடியிருக்கிறார்கள். அப்போதுதான் தான் ஆட்டோவில் தவறவிட்டது தெரியவந்திருக்கிறது.

உடனே தனது மகன் பப்புவுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். அவர் பதறி அடித்துக்கொண்டு எண்ணூர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுக்கவும். எண்ணூர் போலீசார் மணலி புதுநகர் ஆண்டார்குப்பம் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து அந்த ஆட்டோவை கண்டறிந்தனர். அந்த ஆட்டோ ஓட்டுனரை பிடித்து விசாரித்தபோது தலையணையை யாரோ தவறாக விட்டுச் சென்று விட்டார்கள். அந்த பழைய தலையணை எதற்கு என்று ஆண்டார்குப்பம் அருகே உள்ள ஓடை குப்பையில் தூக்கி வீசி விட்டதாக சொல்லியிருக்கிறார்.

அவர் சொன்னதில் நம்பிக்கையில்லாத போலீசார் அவரையும் அழைத்துக்கொண்டு அவர் சொன்ன இடத்தில் சென்று குப்பையை கிளறி இருக்கிறார்கள் . அங்கே அந்த தலையணை கிடைத்திருக்கிறது. அதை எடுத்து பிரித்து பார்த்து இருக்கிறார்கள். அதில் 90 ஆயிரம் ரூபாய் பணம் அப்படியே இருந்திருக்கிறது . குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுதாகர் உரியவரை அழைத்து அந்த 90 ஆயிரம் ரூபாய் பணத்தை ஒப்படைத்திருக்கிறார்.