சிறையில் இருக்கும் சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் திட்டம்..?

 
1

சென்னையைச் சேர்ந்த ‘சவுக்கு’ என்ற யுடியூப் சேனலின் முதன்மைச் செயல் அதிகாரி சங்கர். இவர் தனது நேர்காணல் ஒன்றில், காவல் துறை உயரதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக கருத்துகளை தெரிவித்ததாக புகார்கள் எழுந்தன. கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையின் உதவி ஆயவாளர் சுகன்யா அளித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப் பதிந்தனர். தொடர்ந்து, மே 4-ம் தேதி தேனியில் இருந்த சவுக்கு சங்கரை சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர், கோவைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், ‘சவுக்கு ஆவேசம்.. இப்படியும் செய்யுமா காவல் துறை!’ என பதிவிட்டு, பெண் காவலர்கள் குறித்த சவுக்கு சங்கரின் வீடியோவை வெளியிட்ட ‘ரெட் பிக்ஸ்’ யூடியூப் மீதும் சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர். மேலும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாிரக்கவும் சைபர் கிரைம் காவல் துறையினர் திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.