செந்தில் பாலாஜி, அசோக் குமாருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப போலீஸ் திட்டம்
செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமாருக்கு மீண்டும் சம்மன் விடுக்க சென்னை போலீஸ் திட்டமிட்டுள்ளது.
முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியை கவிழ்ப்பதற்காக அக்கட்சியின் எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசப்பட்டதாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இருப்பதாக கூறி சம்மன் அனுப்பட்ட நிலையில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி இதுவரை ஆஜராகவில்லை. இன்று காலை 10.30 மணிக்கு ஆஜராக வேண்டிய நிலையில், தற்போதுவரை செந்தில் பாலாஜி ஆஜராகவில்லை என்று செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலையில் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமாருக்கு மீண்டும் சம்மன் விடுக்க சென்னை போலீஸ் திட்டமிட்டுள்ளது. தொடர்ந்து ஆஜராகத் தவறினால், அவர்களை கைது செய்ய நீதிமன்றத்தின் உரிய உத்தரவைப் பெறும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என போலீஸ் தெரிவித்துள்ளது.

