ரவுடி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு - செங்கல்பட்டு அருகே பரபரப்பு
Updated: Mar 28, 2025, 21:43 IST1743178413329

செங்கல்பட்டு அடுத்த ஆப்பூர் வனப்பகுதியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதாக ரவுடி மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளியான அசோக், வழக்கு ஒன்றின் விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது செங்கல்பட்டு அடுத்த ஆப்பூர் வனப்பகுதியில் தாக்கிவிட்டு தப்ப முயன்றதாக ரவுடி அசோக்கின் காலில் போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அசோக்கின் காலில் காயம் ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீஸ் சுட்டதில் அசோக்கின் கால் முட்டிக்கு கீழ் காயமுடைந்தது. 28 வயதான அசோக் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.