சீருடைகள் ரீல்ஸ் வெளியிட்டதால் வசமாக சிக்கிய காவலர்கள்! லிஸ்ட் வெளியானது

 
காவலர்கள் சீருடைகள் ரீல்ஸ் வெளியிட்டால் நடவடிக்கை!

தமிழ்நாடு முழுவதும் சீருடையில் ரீலஸ் வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 


தமிழ்நாடு முழுவதும் சீருடையில் ரீலஸ் வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தது. சமூக வலைதளங்களில் சீருடை உடன் ரீலஸ் வெளியிட்ட காவலர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் மட்டும் 14 காவலர்கள் இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில் சீருடை அணிந்து ரீல்ஸ் வெளியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்ச்சைக்குரிய வீடியோ உடன் காவலர் விவரத்தை சம்பந்தபட்ட காவல்நிலையங்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வீதியை மீறும் காவலர்கள் மீது காவல்துறை நடத்தை விதிகளின்படி துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  காவல்துறை சீருடையின் கண்ணியம், ஒழுக்கம் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை பாதுகாக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.