வீரமணி மீதான போக்சோ வழக்கை முடித்து வைத்த யாஷ்மினும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
கோயம்பேடு காவல் உதவி ஆணையர் யாஷ்மினையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் (DGP) மகேஷ் குமார் அகர்வால் பிறப்பித்த உத்தரவின்படி, வியாழக்கிழமையன்று கோயம்பேடு உட்கோட்டத்தின் உதவி ஆணையர் யாஸ்மின் 'காலியிட இருப்பு' (Vacancy Reserve - VR) நிலைக்கு மாற்றப்பட்டார். மேலும், இன்று மாலைக்குள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் உடனடியாக பணியில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
வீரமணிக்கு எதிரான வழக்கின் விசாரணை முடிவடைந்ததற்கான அறிக்கையை (closure report), உதவி ஆணையர் யாஸ்மின் கடந்த 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி 9-ஆம் தேதியன்று சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அதாவது, 19 பிப்ரவரி 2026 அன்றுதான், வீரமணி கைது செய்யப்பட்ட குற்ற எண் 174/2025 ல், மேல் நடவடிக்கை கைவிடப்படுகிறது என்று இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த இறுதி அறிக்கையை தாக்கல் செய்தவர் உதவி ஆணையர் யாஸ்மின். அப்போது குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்தவர் ராதிகா ஐபிஎஸ். சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்தவர் அருண் ஐபிஎஸ்.

