ரவுடிகளுக்கு உதவிய காவல் ஆய்வாளர்கள் கூண்டோடு பணியிடமாற்றம்

 
dgp sylendrababu

ரவுடிகளுக்கு உதவி புரிந்து வந்த 3 காவல் ஆய்வாளர்கள் 3 உதவி ஆய்வாளர்கள் உட்பட 39 பேர் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

1,353 cops get transfer to home districts across Tamil Nadu - DTNext.in

பிரபல ரவுடி காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை குணாவிற்கு உதவி செய்தது தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான விவகாரத்தில்,  மூன்று காவல்துறை ஆய்வாளர்களை தெற்கு மண்டலத்திற்கு பணியிட மாற்றம் செய்து, டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார்.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் காவல் நிலையதேதில் பணியாற்றி வந்த ஆய்வாளர்  மகேஷ்வரி, ஶ்ரீபெருமந்தூர் ஆய்வாளராக பணியாற்றிய ராஜாங்கம் மற்றும்
மணிமங்கலம் ஆய்வாளரான பாலாஜி ஆகிய  மூன்று காவல் ஆய்வாளர்களை தெற்கு மண்டலத்திற்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவு பிறபித்து உள்ளார். இதன் தொடர்ச்சியாக மூன்று உதவி ஆய்வாளர்கள் மற்றும் 33 காவலர்கள் என மொத்தம் 39 பேர் கூண்டோடு மாற்ற செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல காவலர்கள் மாற்ற செய்யப்பட இருப்பதால் காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.