முதல்வரின் பாதுகாப்பு பணிக்கு சென்ற காவலருக்கு பாலியல் தொல்லை
Nov 5, 2026, 15:38 IST1793873317259
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் முதலமைச்சரின் பாதுகாப்புப் பணிக்குச் சென்ற பெண் காவலருக்கே சக காவலரால் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெருந்துறையில் முதல்வர் விஜய் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணிக்குச் சென்ற நெல்லையைச் சேர்ந்த பெண் காவலருக்கு சக காவலர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து பெண் காவலர் அளித்த புகாரில், சிறப்பு எஸ்.ஐ. குமார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல்வர் நிகழ்ச்சியை முடித்து விட்டு வேனில் நெல்லைக்கு திரும்பும் போது பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறப்பு எஸ்.ஐ. குமாரை சஸ்பெண்ட் செய்து நெல்லை மாநகர ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

