விஜய் கட்சிக்கு காவல்துறை நோட்டீஸ்

 
தவெக முதல் மாநாடு எப்போ..? கொள்கை , செயல் திட்டம் என்ன? கொடிக்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யம் - விஜய் தகவல்.. 

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்  விஜய்,  கட்சியின் அதிகாரப்பூர்வ கட்சிக் கொடியினையும், கட்சியின் பாடலையும்  கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி அறிமுகம் செய்து வைத்தார்.

vijay

பனையூரில் உள்ள  தலைமை அலுவலகத்தில், நிர்வாகிகள் முன்னிலையில் உறுதிமொழியேற்று, பின்னர்  இருபுறமும் யானை, வாகை மலருடன், சிவப்பு, மஞ்சள் நிறத்தில் அமைந்திருந்த கட்சிக் கொடியை அறிமுகம் செய்தார்.  தொடர்ந்து அன்றைய தினமே  கட்சியின் பாடலும் அறிமுகப்படுத்தப்பட்டது.  அதனையடுத்து விழா மேடையில் பேசிய தவெக தலைவர் விஜய், கட்சி அறிவிக்கப்பட்ட போதிலிருந்தே அனைவரும்  எதிர்பார்த்திருப்பது மாநில மாநாட்டிற்காகத்தான்.  அதறான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் எங்கு, எப்போது நடைபெறும் என அறிவிக்கப்படும் என்றார்.

தவெக விஜய்


இந்த நிலையில் தற்போது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே செப்டம்பர் 23ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தவெக மாநாட்டிற்கு பாதுகாப்புக் கோரி விழுப்புரம் காவல் துறையிடம் அக்கட்சியின் பொதுச்செயலாளார் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்தார். மனு மீது பரிசீலனை செய்த காவல்துறை,  முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் வரும் பாதைக்கான ஏற்பாடு என்ன? த.வெ.க மாநாட்டிற்கு எத்தனை வாகனங்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. மாநாட்டில் பங்கேற்க வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு ஏற்பாடு என்ன? மாநாட்டில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு உணவு எப்படி வழங்கப்பட உள்ளது? மாநாடு முடிந்த பிறகு அங்கே இருக்கும் குப்பைகளை சுத்தம் எப்படி செய்வது?” என்பன உள்ளிட்ட 21 கேள்விகளுடன் கூடிய நோட்டீசை தமிழ் வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு அனுப்பியுள்ளது.