யூடியூபர் டிடிஎஃப் வாசனின் கடைக்கு போலீஸ் நோட்டீஸ்

 
ttf

சென்னை அயப்பாக்கத்தில் உள்ள யூடியூபர் டிடிஎஃப் வாசனின், இருசக்கர வாகன உதிரிபாக கடைக்கு போக்குவரத்து காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 விபத்தில் சிக்கிய யூடியூபர் டிடிஎஃப் வாசன்

கோவை மேட்டுபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் டிடிஎப் வாசன். இவர் இருசக்கர வாகனத்தின் மூலம் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து அதனை யூட்யூபில் பதிவேற்றுவதை வழக்கமாக கொண்டவர். ஒரு கட்டத்தில் அதிவேகமாக வாகனங்களை இயக்கி SPEEDO METER இல் வாகனம் செல்லும் வேகத்தை பதிவு செய்து அதனை தனது "twin throttles" youtube பக்கத்தில் பதிவேற்றம் செய்து வந்தார். இவரது வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் சேர்ந்தது. மேலும் டிடிஎஃப் வாசன் மஞ்சள் வீரன் எனும் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது whatsapp சேனலை Follow செய்யுங்கள்:

https://whatsapp.com/channel/0029VaDmE2aGehELVeirsJ2r


இந்நிலையில் சென்னை அயப்பாக்கத்தில் உள்ள யூ டியூபர் டிடிஎஃப் வாசனின், இருசக்கர வாகன உதிரிபாக கடைக்கு போக்குவரத்து காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலென்சர்களை விற்பனை செய்ததாக எழுந்த புகாரில் அம்பத்தூர் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளது. பிரதமர் அலுவலகத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் போக்குவரத்து போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளது, டிடிஎஃப் வாசனின் கடைக்கு சென்று ஆய்வு செய்த போலீசார், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அப்புறப்படுத்தினர்.