பணம் இரட்டிப்பாக்கி தருவதாக நடந்த மோசடி- காவல்துறை முக்கிய முடிவு

 
ச்

கோடிக்கணக்கில் ஆன்லைன் செயலி மூலம் நடந்த மோசடியில் தமிழ்நாடு காவல்துறை முக்கிய முடிவு எடுத்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர், கீழவளவு, மேலவளவு, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், FQL Exchange மற்றும் VG Investment போலி செயலிகள் மூலம் முதலீடு செய்யும் பணத்திற்கு இரண்டே மாதங்களில் இரட்டிப்பு லாபம் தருவதாகக் கூறி மாபெரும் மோசடி அரங்கேறியுள்ளது. பணத்தை இரட்டிப்பாக்குவதாக சுமார் ரூ. 1000 கோடிக்கு மோசடி நடந்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை, விருதுநகர், சிவகங்கை, உள்ளிட்ட தென் மாவட்ட மக்களை குறிவைத்து கோடிக்கணக்கில் நடந்த FQL/VG ஆன்லைன் பண மோசடி குறித்த வழக்குகளை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றியுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 13 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். FQL ஆன்லைன் முதலீட்டு மோசடி தொடர்பாக மதுரை, விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல்லில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. FQL ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்த இளைஞர் ராசு (26) தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடதக்கது.