ஞானசேகரனிடம் மீண்டும் விசாரணை தொடங்கியது!

 
anna univ

அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார வழக்கில் கைதான ஞானசேகரனிடம் மீண்டும் விசாரணை தொடங்கியது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஞானசேகரனை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், அண்ணா பல்கலை மாணவி பலாத்கார வழக்கில் கைதான ஞானசேகரனிடம் மீண்டும் விசாரணை தொடங்கியது. வலிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஞானசேகரனுக்கு சிகிச்சை முடிந்ததை தொடர்ந்து போலீசார் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.