விஜயபாஸ்கருக்கு எதிரான ரூ.4 கோடி மோசடி புகார் மீது விசாரணை- காவல்துறை
Sep 7, 2026, 19:46 IST1788790593644
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிரான ரூ.4 கோடி மோசடி புகார் மீது ஆரம்பகட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.4 கோடி பெற்று மோசடி என விஜயபாஸ்கர் மீது அதிமுக வேட்பாளர் தனவிமல் வழக்கு தொடர்ந்தார். சீட் வாங்கித் தருவதாக ரூ.4 கோடி ஏமாற்றியதாக தவெக மாவட்ட அமைப்பாளர், முன்னாள் அமைச்சர் சி.விஜய பாஸ்கர் மீதான புகாரில், ஆரம்ப கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் காவல்துறை பதில் அளித்துள்ளது. புகார்தாரர் வரும் 10ம் தேதி ஆஜராக சம்மன் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

