ஞானசேகரனிடம் போலீசார் விடிய விடிய விசாரணை!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் காவலில் எடுக்கப்பட்டுள்ள ஞானசேகரனிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஞானசேகரனை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் காவலில் எடுக்கப்பட்டுள்ள ஞானசேகரனிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர்.
நேற்றிரவு எழும்பூர் காவல் நிலையத்தில் வைத்து ஞானசேகரனிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் இன்று அதிகாலையில் அண்ணா நகர் துணை ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டான். அண்ணா நகர் துணை ஆணையர் சினேக ப்ரியா தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு வழக்கை விசாரித்து வருகிறது. ஞானசேகரனை 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.