கைதான பிரபல யூடியூபரின் மகன்! விசாரணை வளையத்தில் ரவுடி பேபி சூர்யா

 
ஆபாச படத்தை வெளியிடப்போவதாக கொலை மிரட்டல்- ரவுடி பேபி சூர்யா கைது

புதுச்சேரியில் சிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய பிரபல யூடியூபரின் மகனை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்த நிலையில், அச்சிறுமியின் குடும்பத்தை மிரட்டியதாக வந்த புகாரின் பேரில் மதுரையை சேர்ந்த சிக்கா அவரது மனைவி சுமி மற்றும் ரவுடி பேபி சூர்யா ஆகியோரை சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.


புதுச்சேரியை சேர்ந்த சிறுமி ஒருவர் 11-ம் வகுப்பு படித்து வருகின்றார். இவர் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வந்துள்ளார். இதனிடையே அந்த சிறுமியின் இன்ஸ்டாகிராம் ஐடிக்கு அறிமுகம் இல்லாத புதிய நபரிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. நாளைடைவில் இருவரும் குறுஞ்செய்தி அனுப்புவது, வீடியோக்களை பரிமாறுவது மூலம் நட்பாக பழகி உள்ளனர். அவர்கள் பழகிய 15 நாட்களுக்குள் அந்த நபர் திடீரென சிறுமிக்கு பல்வேறு ஆபாச வீடியோக்கள் மற்றும் அந்த சிறுமயின் ஆபாச வீடியோவையும் அனுப்பி வைத்து மிரட்டத் தொடங்கியுள்ளார்.

இதனால் செய்வதறியாது தவித்த அந்த இது குறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது தாய் புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். நவீன மென்பொருட்களை பயன்படுத்தி இன்ஸ்டாகிராம் மூலமாக அந்த வீடியோவை அனுப்பியது யார் என்று விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சிறுமிக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி மிரட்டியது மதுரை சேர்ந்த பிரபல யூடியூபர் சிக்கந்தின் ஷா-சுமி தம்பதியின் மகன் அஷ்ரப் அலி(24) என்பதும், ரவுடி பேபி என்று அழைக்கப்படும் தசூர்யா அவருடைய சித்தி என்பதும் தெரியவந்தது. மதுரை விரைந்த தனிப்படையினர் அவரை கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.

Rowdy baby Surya, Sikandar arrested in Madurai cyber crime police in action  TNN | ரவுடி பேபி சூர்யா, சிக்கா கைது - மதுரை சைபர் கிரைம் போலீசார் அதிரடி


இதனிடையே சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தின் ஷா, சுமி ஆகியோரையும் விசாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்திருந்தனர். புகார் கொடுத்ததால் சிறுமியின் குடும்பத்தை மிரட்டியதைத் தொடர்ந்து ரவுடிபேபி சூர்யா, அவரது சகோதரி சிமி- கணவர் சிக்கந்தின் ஷா ஆகியோரை சைபர் கிரைம்போலீஸார் இன்று அழைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.