வெளிமாநிலத்தவர் தொடர்பு கொள்ள உதவி எண்களை அறிவித்துள்ளது காவல்துறை

 
police

பாதுகாப்பற்ற நிலையில் இருப்பது போல் உணரும் வெளிமாநிலத்தவர்கள் தமிழ்நாடு காவல்துறையின் உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Image

கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் வடமாநிலத்தவர்களை தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரவின. இதன்காரணமாக தமிழகத்தில் உள்ள வட மாநில தொழிலாளர்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் சொந்த ஊர் செல்வதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவர்கள் குவிந்தனர். அவர்கள் ஹோலி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வதாக தெரிவித்திருந்த நிலையில் போலீசார், இலவச தொலைப்பேசி எண்களை அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பது போல் உணரும் வெளிமாநிலத்தவர்கள் தமிழ்நாடு காவல்துறையின் உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என குறிப்பிட்டு, 0421-22-3313, 9498101300, 9498101320 ஆகிய எண்களை அறிவித்துள்ளனர். உதவி தேவைப்படும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு, HELPLINE எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.