கல்லூரி வகுப்பறைக்குள் புகுந்து மாணவர்களை கைது செய்த போலீசார்- பரபரப்பு வீடியோ
மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி வகுப்பறையில் உள்ளே புகுந்து மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

வகுப்பில் உள்ள மாணவர்களைக் கைது செய்கிறதா @tnpoliceoffl?
— Indra Kumar Theradi (@THE_INDRA_KUMAR) July 22, 2026
மதுரை மாநகர் மாவட்ட தலைவர் ஜெ.டீலன் ஜெஸ்டின் மாநில செயற்குழு உறுப்பினர் சி.டேவிட் ராஜதுரை ஆகியோர் தங்களது கல்லூரியான காமராஜர் பல்கலைக்கழகத்தில் MKU வகுப்பில் இருந்த பொழுது தமிழ்நாட்டின் காவல் துறை முன்எச்சரிக்கை கைது… pic.twitter.com/xhRF7D8plC
நீட் தேர்வு மோசடிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் நடைபெறும் மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக, சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களிலும் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இதனை காரணம் காட்டி, எஸ்.எப்.ஐ அமைப்பின் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் ஜெ.டீலன் ஜெஸ்டின் , மாநில செயற்குழு உறுப்பினர் சி.டேவிட் ராஜதுரை ஆகியோர் தங்களது கல்லூரியான காமராஜர் பல்கலைக்கழகத்தில் MKU வகுப்பில் இருந்த பொழுது தமிழ்நாட்டின் காவல் துறை முன்எச்சரிக்கை கைது என்ற பெயரில் கைது செய்ய Department வாசலில் காத்துக் கொண்டிருக்கிறது. போராட்டம் நடத்துவதை தடுப்பதாக கூறி மதுரையில் எஸ்.எப்.ஐ. நிர்வாகிகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

