பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுராந்தகத்தில் போலீசார் குவிப்பு

 
சஃப் சஃப்

மோடி வருகையை முன்னிட்டு ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம்,  திருவண்ணாமலை, நெல்லை, ஆகிய மாவட்டங்களில் இருந்து 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் பிரதமர் வருகையை முன்னிட்டு  செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் டிரோன் கேமரா பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை - திருச்சி, திருச்சி - சென்னை இரண்டு தேசிய நெடுஞ்சாலை அருகே பிரதமர் பங்கேற்க்கும் பொதுக்கூட்டம் என்பதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது சென்னையில் இருந்து தென் மாவட்டம் செல்லும் வாகனங்கள் வண்டலூர், கேளம்பாக்கம், கிழக்கு கடற்கரை சாலை வழியாகவும் அல்லது படப்பை, ஓரகடம், வந்தவாசி வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுளேளது. தென் மாவட்டத்தில் இருந்து சென்னை மார்கமாக செல்லும் வாகனங்கள் திண்டிவனம், வந்தவாசி வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நடைபெறும் பொதுக்கூட்டம் என்பதால் பொதுக்கூட்ட மேடையில் வைக்கப்பட்டுள்ள பேனரில் சட்டமன்ற முகப்பு போல் அமைக்கப்பட்டுள்ளது பிரதமர் பங்கேற்க்கும் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவர்கள் பங்கேற்க்கும் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடபாடி பழனிசாமி, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துக்கொள்ள உள்ளனர்.

கேரளாவில் நடைபெறும் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்க்கு தனி விமானத்தில் வருகை தர உள்ளார் சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுராந்தகத்திற்க்கு ஹெலிகாப்டர் மூலம் வருகை தர உள்ளார் மதுராந்தகத்தில் பொதுக்கூட்ட மேடை அருகே அமைக்கப்பப்பட்டுள்ள ஹெலிபேடில் ஹெலிகாப்டர் தரையிரக்கப்பட்டு பொதுக்கூட்ட மேடைக்கு 3 மணிக்கு பிரதமர் மோடி வருகை தர உள்ளார் ஒரு மணி நேர நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மீண்டும் மதுராந்தகத்தில்  இருந்து சென்னை விமான நிலையத்திற்க்கு ஹெலிகாப்டரில் சென்று சென்னை விமான நிலையத்தில் தனி விமானம் மூலம் டெல்லி செல்கின்றார் பிரதமர் மோடி இந்த பொதுக்கூட்டத்தில் ஒரு லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.