போலீஸ் வளையத்திற்குள் சீமான் வீடு!

 
ச்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு சீமான் வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டினர். மேலும் சீமான் நாளை காலை விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். போலீசார் கண்முன்னே சம்மனை கிழித்த சீமான் வீட்டு காவலாளி சுபாகர், விசாரணைக்கு வந்த போலீசாரை தாக்கியதுடன் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். இதனையடுத்து சம்மனை கிழித்த விவகாரத்தில் சீமான் வீட்டு காவலாளி சுபாகர் மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த அமல்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், சுபாகரின் துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். சீமான் வீட்டு காவலாளியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கியில் இருந்து 20 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சீமான் வீட்டை சுற்றி சுமார் 20க்கும் மேற்பட்ட  போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். சீமான் வீட்டில் சம்மன் கிழிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணைக்கு வந்தபோது, காவலாளிக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின் காவலாளி கைது செய்யப்பட்டதை அடுத்து, நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் திரண்டுவருவதால் சீமான் வீட்டு முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தடுப்புகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் நீலங்கரையில் உள்ள சீமான் வீட்டுக்கு அடையாறு துணை ஆணையர் பொன் கார்த்தி வந்துள்ளார்.