விஜய் பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு

 
vijay

நாளை பெரம்பூரில் நடத்த திட்டமிட்டிருந்த தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் வரும் 30 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த முறை தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாக தேர்தல் களம் காண்கிற நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்தே தேர்தல் பரப்புரையை தொடங்கினார். பின்னர் கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்திற்கு பிறகு, பரப்புரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், தவெக தலைவர் விஜய் பரப்புரையை விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக நாளை பெரம்பரில் விஜய் பரப்புரை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நாளை பெரம்பூரில் நடத்த திட்டமிட்டிருந்த தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. பெரம்பூர் எம்.கே.பி நகரில் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கோரியிருந்த நிலையில், தவெகவினரின் பிரசாரத்திற்கு மாற்று இடம் கேட்டு விண்ணப்பிக்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து முறையிட தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்துள்ளனர்.