பெண் போலீசின் செல்போன் எண்ணை கேட்டாரா சவுக்கு சங்கர்?

 
savukku

திருமணம் ஆகாத என்னிடம் செல்போன் நம்பரையும், பெயரையும் சவுக்கு சங்கர் கேட்டதாக பெண் போலீஸ் புகார் அளித்துள்ளார்.

tn


பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார், சவுக்கு சங்கர் மீது, ஏற்கனவே பல்வேறு காவல் நிலையத்தில் 7 வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில், இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக மேலும்  ஒரு வழக்கு பாய்ந்துள்ளது.  இதனிடையே திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கிற்காக, சவுக்கு சங்கர் இன்று திருச்சி அழைத்து செல்லப்பட்டார். கோவையிலிருந்து திருச்சி அழைத்து செல்லும் வழியில் பாதுகாப்பிற்கு வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நீதிபதியிடம் சவுக்கு சங்கர் குற்றச்சாட்டியுள்ளார். போலீசார் தாக்கியதாக சவுக்கு சங்கர் கூறிய நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் பரிசோதிக்க திருச்சி மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் வேனில் வரும்போது திருமணம் ஆகாத என்னிடம் சவுக்கு சங்கர் செல்போன் எண் மற்றும் பெயரை கேட்டதாக பெண் போலீஸ் ஒருவர் நீதிபதியிடம் புகார் கூறியுள்ளார். ஒருவேளை என் பெயரை சொல்லி இருந்தால் எனக்கு சவுக்கு சங்கர் அவப்பெயர் ஏற்படுத்தியிருப்பார் எனக் கூறினார். சவுக்கு சங்கர் தரப்பும் பதிலுக்கு
திருச்சி நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக காரசார விவாதத்தில் ஈடுபட்டார். அப்போது பெண் காவலர்கள் சட்டையில் பெயர் பட்டை இல்லாமல் தன்னை வாகனத்தில் அழைத்துவந்தனர் என்றும், வேனில் தன்னை தாக்கிய பெண் காவலர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் சவுக்கு சங்கர் த்ரப்பு விவாதத்தில் ஈடுபட்டனர்.