யுவன் சங்கர் ராஜா மீது போலீசில் புகார்
Updated: Aug 18, 2024, 16:11 IST1723977715070
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிரபல பின்னணி பாடகர், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் வாடகை வீட்டில் வசித்து வந்ததாகவும், வாடகை பணம் ரூ.5 லட்சம் செலுத்தாமல் இரவோடு இரவாக வீட்டை காலி செய்யவுள்ளதாக வீட்டின் உரிமையாளர் ஹஜ்மத் பேகம் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் வாடகைப் பணம் ரூ.20 லட்சத்தை செலுத்தாமல் ஸ்டூடியோவையும் காலி செய்வதாக உரிமையாளர் ஹஜ்மத் பேகம் புகார் அளித்துள்ளார். மேலும் 2018 முதல் வைத்திருந்த ஸ்டூடியோவிற்கு 3 ஆண்டுகளாக வாடகை தரவில்லை என உரிமையாளர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
...