“ரூ.40,000க்கு காவல் ஆய்வாளர் ஓசியில் உணவு- வைரலான பில் தவறானது”... வெளியான நோட்டீஸ்
சென்னை துரைப்பாக்கத்தில் பிரபல "மவுண்ட்ரோடு பிலால்" உணவகத்தில் காவல் ஆய்வாளர் பிரபு வாரத்திற்கு ரூ.10,000-க்கு ஓசியில் உணவு வாங்கியதாக கூறி ஹோட்டல் உரிமையாளர் வெளியிட்ட பில் தவறானது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளடு.
சென்னை துரைப்பாக்கத்தில் பிரபல "மவுண்ட்ரோடு பிலால்" உணவகத்தில் காவல் ஆய்வாளர் பிரபு வாரத்திற்கு ரூ.10,000-க்கு ஓசியில் உணவு வாங்கியதாக கூறி ஹோட்டல் உரிமையாளர் வெளியிட்ட, அவர் பெயருடன் உள்ள பில் இணையத்தில் வைரலாகிவருகிறது. அதில் மாதம் ரூ.40,000க்கு ஓசியில் உணவு வாங்குவதால் கட்டுப்படி ஆகாததால் உணவு தர மறுத்த ஹோட்டல் நிர்வாகத்திற்கு பிரபு பிரச்சனை கொடுத்ததால், ஓசியில் உணவு வாங்கிய பில்லை இணையத்தில் வெளியிட்டதாக ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்திருந்தது.
பிரபல "மவுண்ட்ரோடு பிலால்" உணவகத்தில் துரைப்பாக்கம் காவல் ஆய்வாளர் பிரபு வாரத்திற்கு ரூ.10,000 வீதம் மாதம் ரூ.40,000க்கு ஓசியில் உணவு வாங்கியதாகவும், ஒருகட்டத்தில் உணவு தரமறுத்ததால் ஹோட்டல் நிர்வாகத்திற்கு பிரபு பிரச்சனை கொடுத்ததாகவும் கூறி அவர் பெயருடன் கூடிய பில்லை ஹோட்டல் உரிமையாளர் வெளியிட்டது இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், தற்போது இணையத்தில் பரவும் ஸ்கிரீன் ஷாட்கள், பில்கள், படங்கள் அனைத்தும் முற்றிலும் தவறானவை என்று ஹோட்டல் உரிமையாளர் மறுப்பு தெரிவித்துள்ளதாக அந்நிர்வாகத்தின் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

