சிங்கம் சூர்யாவாக மாறி வழிப்பறி கொள்ளையனை துரத்தி பிடித்த போலீஸ்

 
police

சிங்கம் படம் பாணியில் திருடனை துரத்திப்பிடித்த போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகிறது.

police

கர்நாடக மாநிலம் மங்களூரு மாநகரில் நேரு மைதானம் பகுதியில் அமர்ந்திருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியை மிரட்டிய 3 மர்ம நபர்கள், அவரிடம் இருந்து செல்போன் மற்றும் பர்சை பறித்து  ஓட முயன்றனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த வருண் என்ற போலீஸ்காரர், அதனைப் பார்த்ததும்  சிங்கம் படம் சினிமா பாணியில்  அவர்களை துரத்தி சென்று கொள்ளையன் ஒருவனை மடக்கிப் பிடித்தார்.  அப்போது அந்த குற்றவாளி தப்ப முயன்ற போது அவனை இறுக்கமாக பிடித்து, அவனிடம்  விசாரணை மேற்கொண்டபோது  நீர்மார்க்கம் பகுதியை சேர்ந்த ஹரிஷ் பூஜாரி 32 தெரியவந்தது.

இதையடுத்து  மற்றொரு நபரை பிடிபட்ட நபர் மூலமே போன் செய்து வரவழைத்து அவனை மடக்கிப் பிடித்தனர். அவன் பெயர் சமந்த் வயது 20 என தெரியவந்தது. மேலும் தப்பி ஓடிய ராஜேஷ் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.  மங்களூரு தெற்கு  போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடனை சினிமா பணியில் துரத்திப் பிடித்த போலீஸ்காரனுக்கு மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் பத்தாயிரம் வழங்கி பரிசு வழங்கி கவுரவித்தார்