வீரமணி வழக்கில் பொதுமக்கள் தகவல் அளிக்க காவல்துறை வேண்டுகோள்!
ஜெம் வீரமணி வழக்கு தொடர்பான புகார்கள், ஆவணங்கள், முக்கிய விவரங்கள் தெரிந்தால் 93453 19676 என்ற செல்போன் எண்ணில் நேரடியாகவோ, வாட்ஸ் ஆப் மூலமாகவோ தெரிவிக்கலாம் என காவல்துறை அறிவித்துள்ளது.
'ஜெம் கிரானைட்ஸ்' ஆர்.வீரமணி எளிய குடும்பங்களை சேர்ந்த மற்றும் ஆதரவற்ற 100 க்கும் மேற்பட்ட சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளன. ஜெம் வீரமணி பாலியல் வன்கொடுமை வழக்கு சிறப்பு புலனாய்வு குழு அமைத்தது தமிழக அரசு ஜெம் வீரமணி வழக்கை இனி SIT விசாரிக்கும். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக சாந்தி என்ற பெண்ணும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல ஜெம் வீரமணியின் உதவியாளர் கணேசன் என இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜெம் வீரமணி வழக்கு தொடர்பான புகார்கள், ஆவணங்கள், முக்கிய விவரங்கள் தெரிந்தால் 93453 19676 என்ற செல்போன் எண்ணில் நேரடியாகவோ, வாட்ஸ் ஆப் மூலமாகவோ தெரிவிக்கலாம் என காவல்துறை அறிவித்துள்ளது. தகவல் கொடுப்பவர்கள் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் பெறப்படும் அனைத்து தகவல்களும் விசாரிக்கப்பட்டு உடனே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை கூறியுள்ளது.

