சீமானுக்கு 2வது சம்மன் அனுப்பி போலீசார் நடவடிக்கை!!

 
tn

நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக சீமானுக்கு 2வது சம்மன் அனுப்பி  போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

seemanநடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 10 ஆம் தேதி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பினர்.  ஆனால் சீமான்  ஆஜராகவில்லை.  பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதால் வழக்கில் ஆஜராக அவகாசம் வழங்கும்படி சீமான் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 12ஆம் தேதி  காவல் நிலையத்தில் ஆஜராவார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் சீமான் ஆஜராகவில்லை. சீமானுக்கு பதிலாக வளசரவாக்கம் காவல்நிலையத்தில் நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சங்கர் ஆஜரானார்.

seeman vijayalakshmi

இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 2வது முறையாக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர் .  சென்னை பாலவாக்கத்தில் உள்ள சீமானின் வீட்டிற்கு  வளசரவாக்கம் போலீசார் சம்மன் அளிக்க சென்றனர். முதல் முறை சம்மன் அனுப்பிய போது, சீமான் ஆஜராகவில்லை என்பதால் 2வது முறையாக சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நடிகை விஜயலட்சுமி மீது மானநஷ்ட வழக்கு தொடர சீமான் தரப்பு முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.