விஷச் சாராய வழக்கு - பாஜக நிர்வாகி கைது

 
பாஜக

மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் விற்பனை செய்த விவகாரத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில்,  இந்த விவகாராரத்ததலைமறைவாக இருந்த பாஜக மாவட்ட தலைவர் விஜயகுமாரை காவல்துறையினர் கைது செய்தனர். 

தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெருக்கரணை மற்றும் பேரம்பாக்கம் ஆகிய பகுதிகளில் மெத்தனால் கள்ளச்சாராயம் அருந்திய விவகாரத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் நான்கு பேர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்த கருக்கந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த அமாவாசை, கடப்பாக்கம் பகுதியை சேர்ந்த நரேந்திரன், பனையூரை சேர்ந்த ராஜேஷ், ஓதியூரைச் சேர்ந்த வேலு, சந்துரு உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்த சித்தாமூர் போலீசார் செய்யூர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். 

மேலும் போலீசார் மருத்துவ ஆய்வு அறிக்கையில் மெத்தனால் எரி சாராயம் என தெரியவர  இது இப்பகுதியில்எப்படி யார் மூலம் கொண்டுவரப்பட்டது என விசாரணை செய்ததில் விளம்பூர் பகுதியைச் சேர்ந்தசெங்கல்பட்டு மாவட்ட பாஜக கட்சியின் சிறுபான்மையினர் மாவட்டத் தலைவர் விஜய் என்கின்ற விஜயகுமார் என்பது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், இவர் மீது ஏற்கனவே காவல் நிலையத்தில் பல சாராய கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் சாராயம் விற்றவர்களிடமிருந்து 135 லிட்டர் மெத்தனால் கலந்த கள்ள சாராயம் இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.