இன்று வெளியாகிறது பா.ம.க-வின் அதிரடி கூட்டணி அறிவிப்பு..! தி.மு.க.வா? த.வெ.க.வா?

 
1 1

தமிழ்நாடு சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வர உள்ளது. இதனால் கூட்டணி அமைக்கும் முயற்சியில் பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இடம் பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் தற்போது அன்புமணி தலைமையிலான பா.ம.க.வும் இணைந்துள்ளது.

ஆனால் ராமதாஸ், அந்த கூட்டணி செல்லாது. சட்டரீதியாகவும் இந்த கூட்டணி செல்லாது. என்னுடன் அமைக்கும் கூட்டணி தான் வெற்றி பெறும் என சமீபத்தில் நிரூபர்களிடம் கூறி இருந்தார். மேலும் பழம் நழுவி பாலில் விழுந்துவிட்டது. தைலாபுரத்திலிருந்து தைலமும் சென்றுவிட்டது என சூசகமாக தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்தது போல் தெரிவித்திருந்தார். அதேபோல தமிழக வெற்றிக் கழக முக்கிய நிர்வாகிகளும் ஜி.கே. மணியின் மகன் தமிழ் குமரன் மூலமாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான நிலையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் இருந்து நேற்று மாலை 4.30 மணி அளவில் சென்னை புறப்பட்டார். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை முடித்த பிறகு இன்று காலை தைலாபுரத்தில் அல்லது சென்னையில் யாருடன் கூட்டணி என அறிவிப்பார் என்று பா.ம.க. வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.