பாமக இளைஞரணி செயலாளர் மறைவு - அன்புமணி இரங்கல்..!!

 
பாமக இளைஞரணி செயலாளர் மறைவு - அன்புமணி இரங்கல்..!! பாமக இளைஞரணி செயலாளர் மறைவு - அன்புமணி இரங்கல்..!!


வேலூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் சோளிங்கர் சக்கரவர்த்தி மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இராணிப்பேட்டை மாவட்டம்,  சோளிங்கர் நகரத்தைச் சேர்ந்த   பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர்    வழக்கறிஞர் சு.சக்கரவர்த்தி  நேற்றிரவு சாலை விபத்தில் காலமானார் என்ற செய்தியறிந்து  பெரும் அதிர்ச்சியடைந்தேன்.

சக்கரவர்த்தி அவரது இளம் வயதிலிருந்தே பாட்டாளி மக்கள் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வந்தார். பாட்டாளி மக்கள் கட்சியில் அவருக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருந்தது. அரசியலிலும், பொது வாழ்விலும் உயரங்களை எட்ட வேண்டிய அவர்,  எவரும் எதிர்பாராத வகையில் நம்மை விட்டு பிரிந்திருப்பதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

பாமக இளைஞரணி செயலாளர் மறைவு - அன்புமணி இரங்கல்..!!

இரு சக்கர ஊர்தியை ஓட்டும் போது விபத்தில் சிக்கியதும், அப்போது தலைக்கவசம் அணியாததும் தான்  அவரது மறைவுக்கு காரணம்.  இரு சக்கர ஊர்தியில் பயணிக்கும் போது தலைக்கவசம் அணியுங்கள் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அதை பின்பற்றியிருந்தால் ஓர் அன்பு சகோதரனை நான் இழந்திருக்க மாட்டேன். இனியாவது இரு சக்கர ஊர்திகளில் பயணிப்பவர்கள் தலைக்கவசம் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும்.

வழக்கறிஞர் சக்கரவர்த்தியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,  அனுதாபங்களையும்  தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.