“ஒரு சிலரின் தூண்டுதலால் பாமகவில் பிரச்னை” - திலகபாமா
Aug 9, 2025, 12:50 IST1754724029551
அய்யாவின் வயோதிகத்தை பயன்படுத்தி சில தூண்டுதலால் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது என பாமக பொருளாளர் திலகபாமா கூறியுள்ளார்.

சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறும் பாமக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாமக பொருளாளர் திலகபாமா, “அய்யாவின் வயோதிகத்தை பயன்படுத்தி சில தூண்டுதலால் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது... நாங்கள் அவரின் கைகளை அரவணைக்க காத்திருக்கிறோம். பாமகவில் நடைபெறும் பிரச்சனைகளுக்கு ஒரு சிலரின் தூண்டுதல்களே காரணம். ஒரு சிலர் பின்னால் இருந்து இயக்குகிறார்கள். நிறுவனர் ராமதாசை உயிராக நேசிக்கிறோம். நடக்கும் அனைத்து பிரச்சனைகளையும் கடந்து செல்வோம். மக்கள் பணியாற்றுவதில் தலைவர் அன்புமணியின் கைதான் ஓங்கியுள்ளது” என்றார்.


