#BREAKING பாமக முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

 
“மாம்பழ சின்னம் நமக்குதான்... இன்னும் 5 மாதத்தில் நீங்களெல்லாம் அமைச்சர்களாவீங்க”- அன்புமணி 

2026 பா.ம.க. வேட்பாளர்கள் முதல் பட்டியலை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

Image

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வரும் 23.04.2026ஆம் நாள் நடைபெறவிருக்கும் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில்  3 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கீழ்வேளூரில்  பாமக பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், அம்பத்தூரில் மாநிலத் துணைத் தலைவர், கே.என். சேகர், செஞ்சியில் பாமக இளைஞரணித்தலைவர் கணேஷ் குமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பின்னர் அறிவிக்கப்படுவார்கள்.