அரசியலில் பரபரப்பு திருப்பம்- திமுகவுடன் கூட்டணி அமைக்க ராமதாஸ் திட்டம்!

 
ராமதாஸ் ராமதாஸ்

சட்டமன்ற பொதுத் தேர்தலில்  பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விருப்பு மனு பெறும் நிகழ்ச்சியை, தைலாபுரத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார் என்று தெரிவித்த மருத்துவர் ராமதாஸ், திருமாவளவன் இருக்கும் கூட்டணியில் இடம் பெறுவீங்களா என்ற கேள்விக்கு, அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார்.

ராமதாஸ்

அதிமுக - பாஜகவின் என்.டி.ஏ கூட்டணியில் அன்புமணியும் இணைந்துள்ளார். இந்த நிலையில் அன்புமணி நடத்தும் கூட்டணி பேச்சு சட்ட விரோதம், நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்தார். இதையடுத்து பாமக சார்பில் விருப்ப மனு விநியோகம் வரும் 9 ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவித்தார். தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு அளிக்கலாம். விருப்ப மனுக்களை 9 ஆம் தேதி காலை 10 மணி முதல் தைலாபுரம் தோட்டத்தில் வழங்கலாம் என்று அவர் தெரிவித்து இருந்தார். அதன்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் தங்களது விருப்ப மனுக்களை இன்று தைலாபுரம் தோட்டத்தில் வழங்கினர்.இந்த நிகழ்ச்சியை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தொடங்கி வைத்தார். இதில் செயல் தலைவர் காந்திமதி, கவுரவ தலைவர் ஜி கே மணி, பொது செயலாளர் முரளி, பொருளாளர் மன்சூர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மனுக்களை பூர்த்தி செய்து கொடுத்தவுடன், பெற்றுக் கொண்டதற்கான ரசீது உடனே வழங்கப்பட்டு வருகிறது. பாமக சார்பில் பொதுத் தொகுதியில் போட்டியிட விரும்புவர்களுக்கு ரூபாய் ஆயிரம் கட்டணமும், தனித்தொகுதியில் போட்டியிட விரும்புவர்களுக்கு ரூபாய் 500 கட்டணமும், பெண்களுக்கு ரூபாய் 500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  வேட்பு மனு பெறுதல், வழங்குதல் இன்று தொடங்கி வருகிற 12-ஆம் தேதி வரை நடைபெறும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார். எனது மகள் காந்திமதி வருகின்ற தேர்தலில் போட்டியிடுவார். அதேபோல் ஜிகே மணியும் போட்டியிடுவார். திருமாவளவன் இருக்கும் கூட்டணியில் இடம்பெறுவீங்களா என்ற கேள்விக்கு, அரசியலில் எது வேணாலும் நடக்கலாம். உங்கள் கூட்டணியில் ஆட்சியில் பங்கு கேட்பீர்களா என்ற கேள்விக்கு, இந்தியாவில் யாரும் எங்களுக்கு பங்கு தரவில்லை. பாமக இரு அணி கிடையாது. ஒரு அணி மட்டுமே உள்ளது. கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது. விரைவில் அறிவிக்கப்படும். எங்களுடைய 20 அஜெண்டாவில் 10.5% இட ஒதுக்கீடு ஒரு அஜெண்டா. அது குறித்தும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தேவைப்படும் பட்சத்தில் விருப்ப மனு பெறப்படும் தேதி நீட்டிக்கப்படும். தவெக வுடன் கூட்டணியில் சேருவீர்களா என்ற கேள்விக்கு உங்களுடைய கற்பனைக்கலாம் பதில் சொல்ல முடியாது என்றார்.